ஆயிரம் இருந்தென்ன எனக்கும்
ஆயிரம் இருந்தென்ன எனக்கும்
ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னை
ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே
அன்பிற்கு ஆழம் இல்லை
அன்பிற்கு அகலம் இல்லை
ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே
ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே
எங்கோ நான் பிறந்தேன்
எங்கோ நான் வாழ்ந்தேன்
வழி தப்பி திரிந்தேனய்யா
வழி தப்பி திரிந்தேனய்யா
அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் – ஆயிரம்
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
கிருபை மாறாதய்யா – 2
கிருபை மாறாதய்யா – 2 – ஆயிரம்
கல்வாரி அன்பிற்கு
இணை ஏதும் இல்லையே
கல்வாரி நாயகனின் அன்பு போதுமே – 2
கல்வாரி நாயகனின் அன்பு போதுமே – ஆயிரம்
பரலோக மேன்மையை விட்டு
என்னை தேடி வந்தீரே
அன்பை நான் எப்படி பாடுவேன் – 2
அன்பை நான் எப்படி பாடுவேன் – 2 – ஆயிரம்
அன்பிற்கு பதிலாக
என்ன நான் கொடுப்பது
என்னை பலியாக கொடுத்துவிட்டேன்.
என்னை பலியாக கொடுத்துவிட்டேன் – ஆயிரம்