ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu mudiyatha Adisayangal
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்-Aarainthu mudiyatha Adisayangal
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
எண்ணி முடியாத அற்புதங்கள்
என் வாழ்விலே என் வாழ்விலே
நீர் செய்தீர் இயேசுவே
உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே
உத்தமமான வழிதனிலே
நடத்தி சென்றவரே
நன்றி உமக்கு சொல்லுவேன்
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
பெலவீன நேரங்களில்
பயந்திடும் சூழ்நிலையில்
பெலமும் அன்பும் தெளிந்தபுத்தியும்
ஆவியை தருபவரே
நன்றி உமக்கு சொல்லுவேன்
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்
சாத்தானின் தந்திரங்கள்
என்னை நெருக்கிடும் வேளைகளில்
கண்மணிப் போல் என்னை காப்பவரே
கன்மலை இயேசுவே
நன்றி உமக்கு சொல்லுவேன்
நாள்தோறும் நன்றி சொல்லுவேன்