ஆவியாம் ஈசனை ஆவியில் – Aaviyam Eesanai Aaviyil
பல்லவி
ஆவியாம் ஈசனை ஆவியில் உண்மையாய்
ஆராதிக்க வேணுமே!
அனுபல்லவி
ஜீவருக் கெல்லாம் அதீதமாக நின்ற
சித்விலாசன் சருவகாரணன் அந்த – ஆவி
சரணங்கள்
1. எங்குமு றைபவன், எவ்வுயிர்க் குமீசன்,
இதயக் கண்ணால்மட்டும் காணத்த கும்விகாசன்,
இங்குமங் குமென்ன வில்லாமல் எவருக்கும்
எந்தவி டத்திலும் இறைவனா கவமர்ந்த – ஆதி
2. சத்து சித்தானந்த மான தனிமுதல்,
சார்ந்தடி பணிபவர்க் கழியாத மெய்ப்பொருள்,
ஓங்கிய அன்பினால் தொழவேண்டுமே, அந்த – ஆவி