இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee seikiraai

Deal Score0
Deal Score0

பல்லவி

இன்னம் நீ என்ன செய்கிறாய்?
குணப்படாமல், தாமதமென்ன?

சரணங்கள்

1. உன்னதத்திலிருந்த நாதன்
இந்நிலத் தவதரித்து
உன்னை மீட்க வந்தாரல்லவோ – ஓ! பாவி – இன்னம்

2. இரட்சண்ய செய்தி கொண்டு
தேவதாசர் வந்து நின்று
ஓதுகிறார் நீதியைத் தானே – ஓ! பாவி – இன்னம்

3. ஒவ்வொரு நாளும் உன் காதில்
இரட்சிப்பின் தொனி தொனிக்க
இன்னமும் நீ தாமதிப்பதேன்? – ஓ! பாவி – இன்னம்

4. தோழர்கள் தூஷிப்பாரென்று
தூரமாக நீ நில்லாதே
ஆவலோடெழுந்து வாராயோ – இரட்சிப்படைய – இன்னம்

5. பகிரங்கமாக இயேசு
உன் பாவத்தைக் காட்டும் நாளில்
பாவ மன்னிப்புக் கிடையாதே – ஓ! பாவி – இன்னம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo