இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் – Raththathinaalae Kazhuvapattean
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன்
பரிசுத்தமாக்கப்பட்டேன்
மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால்
அலகையின் பிடியினின்று-நான்
இரத்தம் ஜெயம். இரத்தம் ஜெயம்
இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்-2
1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் –
சிந்தப்பட்ட திரு இரத்தத்தால்-2
பாவம் செய்யாத ஒரு மகனைப்போல
பார்க்கின்றார் பரமபிதா-இரத்தம் ஜெயம்
2. என் சார்பில் தேவனை நோக்கி
தொடர்ந்து கூப்பிடும் இரத்தம்
அருள் நிறைந்த இறை அரியணையை
துணிவுடன் அணுகிச் செல்வோம்-இரத்தம் ஜெயம்
3. போர்க்கவசம் என் தலைக்கவசம்
இயேசுவின் திரு இரத்தமே
தீய ஆவி(யும்) அணுகாது
தீங்கிழைக்க முடியாது (எந்த)-இரத்தம் ஜெயம்
4. சுத்திகரிக்கும் தூய்மையாக்கும்
வாழ்நாளெல்லாம் தினமும்
நன்மையான காரியங்கள்
நமக்காய் பரிந்து பேசும்-இரத்தம்-ஜெயம்
5. சாவுக்கேதுவான கிரியை நீக்கி
பரிசுத்தமாக்கும் இரத்தம்
ஜீவனுள்ள தேவனுக்கு
ஊழியம் செய்வதற்கு-இரத்தம் ஜெயம்