இராஜா நீர் செய்த நன்மைகளை Raja Neer Seitha Nanmaigalai
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து துதித்திடுவேன்
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து மகிழ்ந்திடுவேன்
நீர் நல்லவரே, சர்வ வல்லவரே,
என்றென்றும் பெரியவரே
அல்லேலூயா (8)
1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகளை
எண்ணியே என்றென்றும் துதித்திடுவேன்
நல்லவரே, நன்மை செய்பவரே
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
அல்லேலூயா (8)
2. தோல்விகளை ஜெயமாக மாற்றினீரே
ஸ்தோத்திர பலியிட்டு துதித்திடுவேன்
எனக்காக யாவும் செய்து முடிப்பவரே
ஜீவனுள்ளவரை துதிப்பேன்
அல்லேலூயா (8)
3. திக்கற்று அறியாமல் திகைத்தபோது
கரம் பிடித்து நடத்தியதால் துதித்திடுவேன்
பாதைக்கு தீபமாக வந்தவரே
பணிவுடன் தொழுதிடுவேன்
அல்லேலூயா (8)