இருளான உலகத்திலே ஒளியாக- Irulana ulagathilae ozliyazha
இருளான உலகத்திலே
ஒளியாக வந்தாராம்
உன்னையும் என்னையும்
ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2
பாலகன் இயேசு பிறந்தாராம்
தேவ குமாரன் வந்தாராம்
இம்மானுவேல் இன்று பிறந்தாராம்
இரட்சகர் இயேசு வந்தாராம்-2
1.மெய்யான ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்
பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன்
2.ஜீவ ஒளியாய்
பூமிக்கு இறங்கி வந்தாராம்-2
மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை
மீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்