இறங்கும் தேவ ஆவியே – Irangum Deva Aaviyae
இறங்கும் தேவ ஆவியே – Irangum Deva Aaviyae
1.இறங்கும், தேவ ஆவியே,
அடியார் ஆத்துமத்திலே;
பரத்தின் நன்மையைக் கொடும்,
மிகுந்த அன்பை ஊற்றிடும்.
2.உம்மாலே தோன்றும் ஜோதியால்,
எத்தேசத்தாரையும் அன்பால்
சம்பந்தமாக்கி, யாவர்க்கும்
மெய் நம்பிக்கையை தந்திடும்.
3.பரத்தின் தூய தீபமே,
அன்புள்ள ரட்சகரையே
எல்லோரும் பற்றிக்கொள்ளவும்,
துதிக்கவும் செய்தருளும்.
4.களிப்பிலும் சலிப்பிலும்
பிழைப்பிலும் இறப்பிலும்
எப்போதும் ஊக்கமாகவே
இருக்கும்படி செய்யும், ஆவியே.
Irangum Deva Aaviyae song lyrics in English
1.Irangum Deva Aaviyae
Adiyaar Aathumaththilae
Paraththin Nanmaiyai Kodum
Miguntha Anbai Oottridum
2.Ummalae Thontrum Jothiyaal
Eththeasaththaaraiyum Anbaal
Sambanthamaakki Yaavarkkum
Mei Nambikkaiyai Thanthidum
3.Paraththin Thooya Deebamae
Anbulla Ratchakaraiyae
Ellorum Pattrikollavum
Thuthikkavum Seitharulum
4.Kalipilum Salipilum
Pilaipilum Irappilum
Eppothum Ookkamagavae
Irukkumpadi Seiyum Aaviyae