இளவேனில் காலம் – Ilavenil Kaalam
இளவேனில் காலம் – Ilavenil Kaalam
இளவேனில் காலம்
இனிப்பான நேரம்
வானம்தான் எல்லை – இங்கு
திசைகள் உனக்கில்லை
மனம் போகும் பாதை எல்லாம்
காற்றாய் பறக்கிறாய்
பயம் அறியா கன்றை போல
துள்ளி பாய்கிறாய்
தருணங்கள் என்றும் வாய்ப்பதில்லை
தலைமுறைக்கும் செல்வம் நிலைப்பதில்லை
தடம் புரண்ட உந்தன் வாழ்வு
தகித்திடும் குற்ற உணர்வு
தடுமாறும் படகாய் ஆனதோ – வாழ்க்கை
சாய்ந்திட தோள்கள் தேடுதோ?
மண்ணோடு மனமும் மறைவதில்லை
மரணத்தில் எல்லாம் முடிவதில்லை
மலிவான உந்தன் வாழ்வை
மாசற்ற இரத்தம் சிந்தி
மரணத்தை வென்ற நாயகன் – இயேசு
மாற்றிட இன்றே வேண்டிடு