உந்தன் நாமம் மேன்மை – Unthan Namam Meanmai Pol Lyrics
Lord You Are Good You Are Good
And Your Mercies Forever and Endures -2
உந்தன் நாமம் மேன்மை போல்
வேறே நாமம் இல்லையே-2
நீரே என் தேவன்-2
வல்லமையுள்ளவரே
நீரே என் தேவன்-2
ஆலோசனைக் கர்த்தரே-நீரே என்
உம்மை ஆராதிக்கின்றோம்-3
இயேசுவே…(4)
அன்பரே…நல்லவரே…வல்லவரே
என் ஆண்டவரே-2
நீரே என் ஆதாரமே
நீரே என் துணையாளரே-2
துன்ப வேளையில் தூக்கி என்னை
தோளில் சுமப்பவரே-2
உமக்கே ஆராதனை-2
இயேசையா உமக்கே ஆராதனை-2
இயேசுவே உம்மை உயர்த்திடுவேன்
என் நேசரே உம்மை பாடிடுவேன்-2
நீர் செய்த எல்லா நன்மைகட்காக
உமக்கே ஆராதனை-2-உமக்கே
எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வ வல்லமை உள்ளவரே-2
இனியும் நடத்திடுவர்
இனியும் நடத்தி செல்வார்
அவர் நம்மை நடத்திடுவார்
பாதை தெரியாத நேரம் எல்லாம்
அதிசயமாய் நம்மை நடத்திடுவார்-2
சத்துருக்கு முன்பாக உனை நிறுத்தி
தலையை உயர்த்திடுவார்-2-எல்ஷடாய்
நெறிந்த நாணலை ஓடியாதவர்
மங்கி எரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்
விடுதலை தேவன் இயேசு பரன்-2
நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில்
ஆனந்தம் நீர் எனக்கு
சூரை செடியின் கீழிலும் உம்
சமுகம் என்னை தேற்றிடுமே-நீர் என்
வறண்ட பாலைவனவாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர்-நீர் என்
கண்டுன்னை அழைத்தவர் கரம் அதை பார்
அவர் கைவிடாதிருப்பார்-2
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆஸ்திகளை எண்ணிப்பார்-2
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
நீ என்றும் அதை எண்ணிப்பார்-2
காப்பார் உன்னை காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்-2
கலங்காதே மனமே காத்திடுவார்-2
நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா
நீர் செய்த நன்மைகள் எண்ணில் அடங்காமல்
உள்ளமே பொங்குதய்யா
வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே
ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே-3
தூக்கி சுமப்பீரே வாழ்நாள் எல்லாம்-2
உந்தன் தோள்களில் நான் இருப்பேன்
பயமின்றி வாழ்ந்திருப்பேன்-தூக்கி
குழப்பங்கள் என்னை குழப்பும் போது
குழந்தை போல நான் உம் முன் வருவேன்
போராட்டங்கள் என்னை சூழ்ந்து கெர்ஜிக்கும் போது
யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன்-2-தூக்கி
பாரங்கள் என்னை அழுத்தும் போது
உந்தன் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
யாரும் இன்றி நான் கலங்கும் போது
என் நண்பராக நீரே என்னை நடத்தி செல்வீரே-2-தூக்கி
எழும்புவேன் எழும்புவேன்-8
கழுகு போல எழும்புவேன்
சிறகை அடித்து எழும்புவேன்-8
NEER EN SONDHAM – The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs