உம்மையன்றி | Ummaiyandri | Tamil Christian Song 2023
உம்மையன்றி | Ummaiyandri | Tamil Christian Song 2023
Lyrics and tune : S.A.Prem Anand
Music, Mix & Mastered : Syres Wilfred @ SOS Studios
Singers : Jasper Zioni and Chalcedony
Video Arrangements : Bro. Salomon @ Jotham Studios
Special Thanks to Dr. Lionel Raj, Tirunelveli.
ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.
வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன?
அவர் மரணத்தை ஜெயித்து மரித்து எழுந்து, சத்தியத்தில் நிறைந்தவராய் கிருபையை நம் மீது பொழிந்து, சோதனையை ஜெயித்து நமக்கும் ஜெயம் அளித்தவர்.
உலகத்தின் பாவத்திற்காக கல்வாரி சிலுவையில் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானராகிய “இயேசு கிறிஸ்து” அவரே.
பிலிப்பியர் 2:11
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக “இயேசுகிறிஸ்து” கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. The same was in the beginning with God. All things were made by him; and without him was not any thing made that was made. Neither is there salvation in any other: for there is none other name under heaven given among men, whereby we must be saved.
Who has ascended up into heaven, or descended? Who has established all the ends of the earth? What is HIS name ?
He is full of truth, conquered the death, poured out His Grace, has overcome all temptations and also saved us from it. Who’s He?
He is the Lamb who was sacrificed on cross for the sins of this World. His name is “Jesus”.
And that every tongue should confess that Jesus Christ is Lord, to the glory of God the Father.
Philippians 2:11
Lyrics:
உம்மை அன்றி வேறே ஒர்நாமம்
பூவுலகில் இல்லையே
உம்மைப் போல இரட்சிக்கும் மேல்நாமம்
வானத்தின் கீழ் இல்லையே (2)
ஆதியிலே தேவனோடு
வார்த்தையாக இருந்தவரே
அகிலமும் படைத்தவரே
அனைத்தும் உந்தன் பாதம்கீழே
இயேசு உம்நாமம் கிறிஸ்தேசுவின் நாமம்
அபிஷேகித்தர் நாமம் அகிலத்தை மீட்கும் உம்நாமம்
1. மரணத்தை ஜெயித்தவர்
மரித்து பின் எழுந்தவர்
உலகத்தை உயிர்ப்பவர்
உன்னதத்தில் உயர்ந்தவர்
சிலுவைக்குச் சென்றவர் சிறுமையை கண்டவர்
சிறியவர் எமை மீட்க குருதியும் தந்தவர்
2. கிருபையை பொழிந்தவர்
சத்தியத்தில் நிறைந்தவர்
நமக்குள்ளே வசிப்பவர்
மகிமையின் மகன்அவர்
உலகத்தின் பாவத்தை
சுமந்தவர் தீர்த்தவர்
உந்தன் எந்தன் சாபங்களை
சிரமதில் ஏற்றவர்
3. சோதனையை ஜெயித்தவர்
சோதனையில் மீட்பவர்
ஆட்டுக்குட்டி ஆனவர்
அகிலத்தின் இரட்சகர்.
விண்ணுலகின் வேந்தனவர்
விண்ணின் மண்ணின் ராஜன்அவர்
உன்னை விண்ணில் சேர்த்திட
மண்ணில் மீண்டும் வருபவர்.
4. உலகத்தில் இருந்தவர் உலகத்தைப் படைத்தவர்
உன்னதத்தின் ஒளியவர் உள்(ன்)மனதின் ஒளிஅவர்
இருளதை ஒழித்தவர் இகமதில் வந்தவர்
இருதயம் தனில்ஏற்க சொந்த பிள்ளை என்றவர்
கர்த்தருக்கே மகிமை !
பாடலுக்கு இசையமைத்த சகோ. வில்பிரட் சைரஸ், ஒளிப்பதிவு செய்து ஒளிவடிவில் கொண்டுவர உதவிய சகோ. சாலமன், பாடலை நேர்த்தியாய்ப் பாடி ஒளியாக்கத்திலும் வந்த பிள்ளைகள் ஜாஸ்பர் சியோனி, சால்ஸ்டணி இவர்களுக்கு வாழ்துக்களும் நன்றிகளும் உரித்தாகுவதாக. வெளியிடப்படுவதற்காக ஜெபித்த மேய்ப்பர், போதகப் பிதாக்கள் அனைவருக்கும் நன்றிகள்.
Bro. Premanand S.A.
Eternal Joy Musics
Tamil Christian songs lyrics