
உம் வசனத்தின் படி – Um Vasanathin Padi
உம் வசனத்தின் படி – Um Vasanathin Padi
உம் வசனத்தின் படி என்னைக் காத்துக் கொள்ள
என் கண்களைத் திறந்தருளும்
உம் வேதம் காட்டிடும் வெளிச்சத்திலே
அனுதினம் நடத்திடும் (2)
அப்பத்தினால் அல்ல உம் வாயிலிருந்து
புறப்படும் வார்த்தையினால் (2)
பிழைப்பேன் என்று சொன்னவரே
பிழைத்திடச் செய்திடும் (2)
-உம் வசனத்தின் படி
வானமும் பூமியும் ஒழிந்து போகும்
அழியாது உம் வசனம் (2)
இருளான பாதையில் வெளிச்சமாய்
வழிகாட்டி இரட்சித்திடும் (2)
-உம் வசனத்தின் படி
நொறுங்குண்ட நெஞ்சத்தைத் தேற்றிடும்
ஆறுதல் உம் வசனம் (2)
நித்திய வழியினில் நடத்திச் செல்லும்
தீபமே உம் வசனம் (2)
-உம் வசனத்தின் படி