உலகினில் வந்துதித்தார் – Ulaginil Vanthuthithar
உலகினில் வந்துதித்தார் – Ulaginil Vanthuthithar
உலகினில் வந்துதித்தார்
இந்த உலகினில் வந்துதித்தார்
இறைவன் இருளிலே ஒளியாயினார்
மாந்தர் நம் வாழ்வில் ஒளி வீசவே தம்
வாழ்வையே நமக்களித்தார்
இயேசு உலகினில் வந்துதித்தார்
மனிதரை மீட்க்கும்படி மனிதனாக
தேவன் மண்ணுலகில் வந்து மனிதனானார்
மனிதரை மீட்க்கும்படி மனிதனாக
தேவன் மண்ணுலகில் வந்து மனிதனானார்
மானிடர்மேல் நல் அன்பைக்கொண்டு
தம் மகனையே மரிக்கவே ஒப்புவித்தார்
இந்த உலகினில் வந்துதித்தார்
ஆவியில் எளியவன் பாக்கியவானென்று
பூவில் எளியவராய் அவதரித்தார்
ஆவியில் எளியவன் பாக்கியவானென்று
பூவில் எளியவராய் அவதரித்தார்
பாவியின் நண்பராம் இயேசுவை நாம் என்றும்
கூவியே வாழ்த்தியே வணங்கிடுவோம்
இந்த உலகினில் வந்துதித்தார்
இந்த உலகினில் வந்துதித்தார்
இறைவன் இருளிலே ஒளியாயினார்
மாந்தர் நம் வாழ்வில் ஒளி வீசவே தம்
வாழ்வையே நமக்களித்தார்
இயேசு உலகினில் வந்துதித்தார்