எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum
எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum
எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்
நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.
எத்தனை அகன்றாலும், எதனை மறந்தாலும்
என் முகம் உந்தன் நெஞ்சினிலே.
அறியாதகலும் இதயங்களில் நீர்
இணையுமே தாயன்பினோடே
அறிந்ததன்றோ உந்தன் தேற்றரவாம்.
எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்
நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.
1. (உள்ளங்கையில் என் பெயரெழுதி நீர்
ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாத்தீர்) – 2
கைப்பிடித்து நீரென்றும் கூட நடத்தி
நெஞ்சினில் வலிக்கின்ற பெருந்துயர் துடைத்து
தெய்வம் நீர் என்னை சிருஷ்டித்த தெய்வம்.
எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்
நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.
2. (அம்மாவின் கர்ப்பத்தில் உருவாகிடும் முன்பே
என்னையறிந்து நீர் காத்திருந்தீர்) – 2
என் மொழிகளை உம் காதோடு வைத்திருந்தீர்
உம் முகத்தை நீர் என் மார்போடு சேர்த்தீர்
சிநேகம் நீர் என்னை அணைக்கின்ற சிநேகம்.
எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்
நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.
எத்தனை அகன்றாலும், எதனை மறந்தாலும்
என் முகம் உந்தன் நெஞ்சினிலே.
அறியாதகலும் இதயங்களில் நீர்
இணையுமே தாயன்பினோடே
அறிந்ததன்றோ உந்தன் தேற்றரவாம்.
எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்
நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.