எந்தன் இயேசு உன்னதத்தில் – Enthan Yeasu Unnathathil

Deal Score0
Deal Score0

எந்தன் இயேசு உன்னதத்தில் – Enthan Yeasu Unnathathil

சரணங்கள்

1. எந்தன் இயேசு உன்னதத்தில் அன்புள்ளோனாய் வாழும் போது
ஏழையேன் கலங்குகிறேன் இப்பூமியில் அதால்
என்று மவர் கிருபை மட்டும் போதுமே

2. இன்னல்களாம் குன்றுதனில் பின்னிடாமல் ஏறுதற்கு
இயேசு என் கால் தனை மான் கால்போலாக்கி என்னை
இன்பமா யென் பாதையோடச் செய்குவார்!

3. ஆரும் துணை இல்லை என்றோ ஏகனாய் நான் ஆனேன் என்றோ
என் மனதில் எண்ணிடேன் ஓர் நாளுமே – இயேசு
என்னுடனில்லாமல் எங்கு போயினர்?

4. என்னருமைத் தோழரன்றோ தெய்வதூத சங்கமெல்லாம்;
இப்போதவர் என் பிதா முன் நிற்கிறார் – பின்னால்
என்னையும் தம் ஊழியத்தால் தேற்றுவார்

5. வியாகுலம் என் வீட்டை விட்டு காட்டிலோடப் பண்ணிடினும்
அங்கேயொரு தூதன் என்னைச் சந்தித்து, சூடாம்
அப்பமும் ஜலமும் தந்து தேற்றுவார்!

6. வரும் நாளுக்காக வீணாய் என் மனம் நொந்தென்ன புண்ணியம்?
என்னைத் தினம் போஷிப்பவர் இல்லையோ? – இன்றும்
ஏழையான் அவரை மட்டும் நம்புவேன்

7. கவனிப்பாய் காகத்தை நீ! விதைப்பில்லை! அறுப்பில்லை!
விலையின்றிப் போற்ற வில்லையோ நாதன் – லீலி
புஷ்பங்களில் வண்மையதை வைத்திட்டார்!

8. பத்மூ தீவில் ஏகனாய் நான் தங்கிடினும் பயப்படேன்
வானம் திறந்தேசு நாதர் ஜோதியாய் – என்னை
பரதீசில் ஆவிக்குள் எடுப்பாரே!

9. ஹா! மகேசா! கருணேசா பொன்னு நாதா! நீரெனக்காய்
வேண்டியதெல்லாம் தயவாய்த் தந்தால் – நானென்
வாணாளெல்லாம் உம்மைப் போற்றிப் பாடுவேன்

Enthan Yeasu Unnathathil song lyrics in English 

1.Enthan Yeasu Unnathathil Anbullonaai Vaalum Pothu
Yealaiyean Kalangukirean Eppoomiyil Athaal
Entru Mavar Kirubai Mattum Pothumae

2.Innalkalaam Kuntruthanil Pinnidaamal Yearutharkku
Yeasu En Kaal Thanai Maan Kaal Polaakki Ennai
Inbamaa Yen Paathai Yodae Seiguvaar

3.Aarum Thunai Illai Entro Yeaganaai Naan Aanean Entro
En Manathil Ennidean Oor Naalumae Yeasu
Ennidanillaamal Engu Poyinar

4.Ennarumai Thozharentro Deivathootha Sangamellaam
Ippothavar En Pithaa Mun Nirkiraar Pinaal
Ennaiyum Tham Oozhiyaththaal Theattruvaar

5.Viyagulam En Veettai Vittu Kaattiloda Pannidinum
Angaeyoru Thoothan Ennai Santhiththu Soodaam
Appamum Jalamum Thanthu Theattruvaar

6.Varum Naalukkaga Veenaai En Manam Nonnthenna Punniyam
Ennai Thinam Posippavar Illaiyo Intrum
Yealaiyaan Avarai Mattum Nambuvean

7.Kvanippaai Kaakaththai Nee Vithaipillai Aruppillai
Vilaiyintri Pottra Villaiyo Naathan – Leeli
Pushpangalil Vanmaiyathai Vaithtittaar

8.Pathmoov Theevil Naan Thangidinum Bayappadean
Vaanam Thirantheasu Naathar Joothiyaai Ennai
Paratheesil Aavikkul Eduppaarae

9.Haa! Mageasha Karuneasaa Ponnu Naathaa Neerenakkaai
Veandiyathellaam Thayavaai Thanthaal Naanen
Vaanaalellaam Ummai Pottri Paaduvean

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo