எந்தன் தாயின் வயிற்றில் – Enthan Thayin vayittril song lyrics
எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே
என்னை கருவில் கண்டவர் நீரே
இந்த உலக தோற்றத்திற்கும் முன்னே
என்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2
எந்தன் மீட்பர் நீரானதால்
நான் அசைக்கப்படுவதில்லை
எந்தன் மேய்ப்பர் நீரானதால்
குறை ஒன்றும் எனக்கில்லையே-2
1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்
என்னை தாங்கி நடத்தினவரும் நீரே
எந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்
என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2-எந்தன் மீட்பர்
2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்
என்னை பாதுகாத்த புகலிடம் நீரே
எந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்
என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2-எந்தன் தாயின்