எந்தன் மனமே – ENDHAN MANAMAE
எந்தன் மனமே – ENDHAN MANAMAE
எந்தன் மனமே
கர்த்தரையே கொண்டாடு நீ
யேகோவா நீரே எல்லாம் நீரே – என்றும்
1. காலையில் பூ பூத்து குலுங்கிடுதே
சோலையில் குயிலும் கானம் பாடிடுதே
வண்ணத்துப்பூச்சி சித்திரம் காட்டிடுதே
வானத்தின் மழையும் பூமியில் கொட்டிடுதே
வீழ்கின்ற நீரும் ஆனந்தமாக்கிடுதே – என்றும்
2 . நிலத்தின் மண்ணினால் மனிதனை உண்டாக்கி
அவனின் நாசியில் ஜீவசுவாசத்தை ஊதி
அவரின் அன்பை கல்வாரி மலையில் காட்டி
அவரின் ராஜ்யத்தின் பாதைதனைக்காட்டி
அவரே வந்து அழைத்து சென்றிடுவார்- என்றும்