என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae
என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae
Lyrics
என் இயேசுவே என் நேசரே
என் அன்பரே என் இன்பரே
எத்தனை அன்பு எத்தனை கிருபை
எத்தனை தயவு என் வாழ்வில்
இயேசு ராஜா எனக்குத் தந்தாரே
என் இயேசுவின் அன்புக்கு ஈடாய்
என்னத்தை செலுத்துவேன்
என் இயேசுவை வாழ்நாளெல்லாம்
துதித்துப் பாடுவேன்
கரம் பிடித்து நடத்தி வந்த தேவன் நீர்
தோளில் சுமந்து வந்த தேவன் நீர்
உம்மை துதிப்பேன் நான்
உம்மை புகழ்வேன் நான்
உம்மை போற்றிடுவேன்
உம்மை உயர்த்திடுவேன்
என் அன்பரே என் இன்பரே
என் இயேசுவே என் நேசரே – எத்தனை
என்னைக் கண்மணிப்போல காத்து வந்தீரே
கஷ்டநேரம் தேற்றி வந்தீரே
உமக்காகவே நான் என்றும் வாழ்ந்திடுவேன்
உம் அன்பினையே எண்ணித் துதித்திடுவேன்
என் தகப்பனே என் தேவனே
என் ராஜனே என் ஜீவனே – எத்தனை
நான் திகைத்து நின்ற நேரத்திலெல்லாம்
கரம் பிடித்து என்னை நடத்தி வந்தீரே
பயப்படாதே என்று என்னை தேற்றினீரே
ஆயுள் காலமெல்லாம் உம்மை துதித்திடுவேன்
என் வெளிச்சமே என் இரட்சிப்பே
என் கோட்டையே என் துருகமே – எத்தனை
En Yesuvae En neasarae
En Anbarae En Inbarae
Ethanai Anbu Ethanai Kirubai
Ethanai Dayauv En Vazhvil
Yesu Raja Enakku Thantharae
En Yesuvin Anbuku Eedaai
Ennathai Seluthuvean
En Yesuvai Vaazhnaal ellam
Thuthithu paaduvaen
Karam pidithu Nadathi Vantha Devan Neer
Thozhil Sumanthu Vantha Devan Neer
Ummai Thuthipean Naan
Ummai Pugalvean Naan
Ummai Pottruvean
En Anbarae En Inbarae
En Yesuvae En Nesar – Ethanai
Ennai Kanmani pola kaathu vantheerae
Kasta nearam Thettri Vantheerae
Umakakagave Naan Entrum Vaazhnthiduvean
Um Anibinaiyae Enni Thuthithiduvean
En Thagappanae En Devanae
En Rajanae En Jeevanae – Ethanai
Naan Thikaithu Nintra Nearthilellam
Karam Pidithu Ennai Nadathi Vantheerae
Bayapadatahe Entru Ennai Thettrineerae
Aayul Kaalamellam Ummai Thuthithiduvean
En Velichamae En Ratchippae
En Koottaiyae En thurukamae – Ethanai