என் கர்த்தாவே உம்மில் தான் – En karthavae Ummil Thaan Lyrics
என் கர்த்தாவே உம்மில் தான் – En karthavae Ummil Thaan
1.என் கர்த்தாவே, உம்மில் தான்
முழு நெஞ்சத்தாலே நான்
வாஞ்சை கொண்டு, நித்தமும்
லோக வாழ்வை அற்பமும்
குப்பையும் என்றெண்ணுவேன்,
உம்மையே சிநேகிப்பேன்.
2.லோகத்தாரின் களிப்பு
துக்கங் கொண்ட நெஞ்சுக்கு
சஞ்சலத்தை அன்றியே,
தேற்றத்தை உண்டாக்காதே;
உம்மையே சிநேகிப்பேன்,
அதால் பாக்கியம் அடைவேன்.
3.தேவரீரில் வாழ்வெல்லாம்
பூர்த்தியாகவே உண்டாம்;
உம்மில் வாஞ்சைகொள்வோனாய்
உண்மையான நேசனாய்
சேர்வோனுக்குத் தேவரீர்
அந்த வாழ்வைக் கொடுப்பீர்.
4. ஆறுதலும் பூரிப்பும்,
ஜீவனும் மகிழ்ச்சியும்
உம்மால்தானே என்றைக்கும்
குறைவின்றிக் கிடைக்கும்;
நீரே அன்பின் காரணர்,
கருணைத் தயாபரர்.
En karthavae Ummil Thaan Lyrics in English
1.En karthavae Ummil Thaan
Mulu Nenjathalae Naan
Vaanjai Kondu Niththamum
Loga Vaazhvai Arpamum
Kuppaiyum Entrennuvean
Ummaiyae Sineakippean
2.Logaththaarin Kalippu
Thukkam Konda Nenjukku
Sanjalaththai Antriyae
Theattraththai Undaakkaathae
Ummaiyae Sineakippean
Athaal Baakkiyam Adaivean
3.Devareeril Vaazhvellam
Poorththiyaagavae Undaam
Ummil Vaankai Kolvonaai
Unmaiyaana Neasanaai
Searvonukku Devareer
Antha Vaazhvai Koduppeer
4.Aaruthalum Poorippum
Jeevanum Magilchiyum
Ummal Thaanae Entrenikkum
Kuraivintri Kidaikkum
Neerae Anbin Kaaranar
Karunai Thayaaparar