
என் தேவனே உன் அடியேன் நான் – En Devane Un Adiyean Naan
என் தேவனே உன் அடியேன் நான் – En Devane Un Adiyean Naan
என் தேவனே உன் அடியேன் நான்
அமைதியில்லா இவ்வுலகில் உன்
அமைதியின் தூய கருவியாக
என்றும் வாழ்ந்திட வரமருள்வாய் (2)
எங்கே பகைமை நிறைந்துள்ளதோ
அங்கே அன்பை விதைத்திடவும்
எங்கே கயமை நிறைந்துள்ளதோ
அங்கே மன்னிப்பை அளித்திடவும்
எங்கே ஐயம் நிறைந்துள்ளதோ
அங்கே நம்பிக்கை ஊட்டிடவும் – இறைவா அருள்வாய் – 2
எங்கே சோர்வு நிறைந்துள்ளதோ
அங்கே புத்துயிர் அளித்திடவும்
எங்கே இடரும் இருள் உள்ளதோ
அங்கே ஒளியை வழங்கிடவும்
எங்கே கவலை மிகுந்துள்ளதோ
அங்கே மகிழ்ச்சி அளித்திடவும் இறைவா அருள்வாய் – 2