என் தேவனே என் ஆத்துமா – En Devanae En Aathumaa Lyrics
என் தேவனே என் ஆத்துமா – En Devanae En Aathumaa Lyrics
1.என் தேவனே, என் ஆத்துமா
நீர் தந்த நன்மையை
சிந்தித்துப் பார்க்கையில், மகா
வியப்பாய்த் தோன்றுதே.
2.உற்பத்திகாலம் முதலாய்
என்னை நடத்தினீர்;
என் ஆவி, தேகம் தயவாய்
இம்மட்டும் தாங்கினீர்.
3.சீர்கேடு நீங்க நெஞ்சத்தை
செம்மைப் படுத்தினீர்;
அநேக ஆறுதல்களை
எனக்கருளினீர்.
4.என் ஜீவகாலம் எல்லாம் நீர்
அன்பாய் விசாரித்தீர்;
இம்மட்டும் என்னைத் தேவரீர்
பராமரிக்கிறீர்.
5.கர்த்தாவே உம்மைப்போற்றுவேன்
இடைவிடாமலே;
எப்போதும் உம்மைப் பற்றுவேன்
உற்சாகமாகவே.
En Devanae En Aathumaa Lyrics in English
1.En Devanae En Aathumaa
Neer Thantha Nanmaiyai
Sinthithu Paarkkaiyil Mahaa
Viyappaai Thontruthae
2.Urpaththi Kaalam Muthalaai
Ennai Nadaththineer
En Aavi Degam Thayavaai
Immattum Thaangineer
3.Seerkeadu Neenga Nenjaththai
Semmai Paduththineer
Anega Aaruthalkalai
Enakkarulineer
4.En Jeevakaalam Ellaam Neer
Anbaai Visaariththeer
Immattum Ennai Devareer
Paraamarikkireer
5.Karththavae Ummai Pottruvean
Idaividamalae
Eppothum Ummai Pattruvean
Urchakamaagavae