என் நம்பிக்கையே – En Nambikkayea
என் நம்பிக்கையே – En Nambikkayea
என் நம்பிக்கையே
என் பெலன் நீரே
என் வாழ்வின் ஆதாரமே 2
நீர் இல்லாமல் என் வாழ்வு இல்லை
என்னை படைத்த தேவன் நீரே
நீர் இல்லாமல் என் வாழ்வு இல்லை
நீர் இல்லாமல் என்னில் எதுவுமில்லை 2
1. தாயின் கருவில் என்னை கண்டவர் நீரல்லவோ
தோளில் தூக்கி என்னை சுமந்தவர் நீரல்லவோ 2- நீர்
2. என் கனவுகள் யாவையுமே நினைவுகளாக்கினீரே
என் தோல்விகள் யாவையுமே வெற்றியாய் மாற்றினீரே 2- நீர்
3. உறவுகள் மறந்திடினும் நீர் என்னை மறக்கவில்லை
மனிதர்கள் மாறிடினும் நீர் மட்டும் மாறவில்லை 2 – நீர்