என் மனச கொள்ளைக் கொண்டு – En Manasa Kollai Kondu
என் மனச கொள்ளைக் கொண்டு – En Manasa Kollai Kondu
என் மனச கொள்ளைக் கொண்டு
உங்க சொந்தமாக்கிக் கொண்டீர்
உங்க அன்பின் வலைவீசி
என்னை அருகினில் இழுத்துக் கொண்டீர்
என்னை அள்ளி அனைத்துக் கொண்டீர்
இயேசைய்யா .. இயேசைய்யா.. உம் அன்பு மதுரமைய்யா
இயேசைய்யா .. இயேசைய்யா.. உம் வேதம் இனிமையைய்யா
தேனிலும் மதுரமைய்யா.. தெவிட்டாத அமுதமைய்யா
1. பாவியாய் நான் வாழ்ந்து வந்தேன் ரொம்ப பாவத்தை நான் செய்து வந்தேன்
உம் பாதத்தை என் கண்ணீரால் கழுவி துடைத்து முத்தம் செய்தேன்
எங்க இல்லத்திலே நீர் வந்து எம் உள்ளத்திலே இடம் பிடித்தீர்
பாவப்பள்ளத்திலிருந்தென்னை தூக்கியெடுத்து
ஜீவ இரட்சிப்பின் வாசனையை வீச செய்தீர்
2.நீர் மட்டும் இல்லையென்றால் எங்கோ எப்படியோ போயிருப்பேன்
உங்க அன்பு மட்டும் இல்லையென்றால் எங்கோ அழிந்து மறைந்திருப்பேன்
சிப்பிக்குள்ளே முத்துப்போல என் கண்ணுக்குள்ளே உண்ண வச்சேன்
இந்த மண்ணுக்குள்ளே நான் மறைத்தாலும்
அந்த விண்ணுலகில் உம்மை வந்து சந்திப்பேன்