என் வாழ்விலும் என் தாழ்விலும் – En Vazhvilum En Thazhvilum song lyrics
என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லாமும் நீரே-2
எங்கு சொல்வேன் இயேசுவே
என்ன செய்வேன் இயேசுவே
நீர் போதும் நீர் போதும்-2
1.என்னை காத்திட யாரும் இல்லையே
என்னை நடத்திட யாரும் இல்லையே
நானே நல்ல மேய்ப்பன் என்றவரே
நானே உந்தன் கேடகம் என்றவரே-2
நீர் போதும் நீர் போதும்-2
2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோ
என்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2
நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரே
என் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2
நீர் போதும் நீர் போதும்-2
3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம்
என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க வைத்தீரே
உம்மை பாடி துதிக்க வாய்ப்பு தந்தவரே
என் தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறிற்றே-2
நீர் போதும் நீர் போதும்-2-என் வாழ்விலும்