எபிரேயர்களின் சிறுவர் குழாம் – Ebireyarkalain Siruvar Kuzham song lyrics

Deal Score0
Deal Score0

எபிரேயர்களின் சிறுவர் குழாம்
ஒலிவக்கிளைகளைப் பிடித்தவராய் உன்னதங்களிலே ஒசன்னா
என்று முழங்கி ஆர்ப்பரித்து
ஆண்டவரை எதிர் கொண்டனரே.

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும்
அவருக்கே சொந்தம்.
ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;
ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே.

ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்?
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்;
பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்;
வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்.

இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்;
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து
நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார்.
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே;
யாக்கோபின் கடவுளது முகத்தைத்
தேடுவோர் இவர்களே.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவரே!
இவரே போரில் வல்லவரான ஆண்டவர்.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்;
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ?
படைகளின் ஆண்டவர் இவர்;
மாட்சிமிகு மன்னர் இவரே.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo