எல்லா துதியும் எல்லா கனமும் – Ella Thuthiyum Ella Kanamum
எல்லா துதியும் எல்லா கனமும் – Ella Thuthiyum Ella Kanamum
எல்லா துதியும் எல்லா கனமும்
எல்லா மகிமைக்கும் பாத்திரர்
நீர் ஒருவரே துதிக்கு பாத்திரர்
நீர் ஒருவரே கனத்துக்கு பாத்திரர்
நீர் ஒருவரே மகிமைக்கு பாத்திரர்
இயேசுவே
1.அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஆனவர் நீரே
இரத்தம் சிந்தி என்னை மீட்க ஜீவன் தந்தீரே
உமக்கே மகிமையை செலுத்துகிறோம்
உமக்கே கனத்தை செலுத்துகிறோம்
உமக்கே மாட்சிமை செலுத்துகிறோம்
உமக்கே ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்
2.வெற்றி சிறந்தார் இயேசு கிறிஸ்து எனக்காய் சிலுவையிலே
தலையை நசுக்கி என்னை உயர்த்தி வாழ வைத்தாரே
உமக்கே மகிமையை செலுத்துகிறோம்
உமக்கே கனத்தை செலுத்துகிறோம்
உமக்கே மாட்சிமை செலுத்துகிறோம்
உமக்கே ஸ்தோத்திரம் செலுத்துகிறோம்