Suththa paran suththa Aaviyae – சுத்தபரன் சுத்த ஆவியே
Suththa paran suththa Aaviyae – சுத்தபரன் சுத்த ஆவியே
பல்லவி
சுத்தபரன் சுத்த ஆவியே நின்மாமகிமை
சொல்லவரம் எனக்கீவையே.
அனுபல்லவி
மெத்தவும் அசுத்தன் நானே
மேவினேன் நின் பாதந்தானே
உத்தமனம் கெஞ்சுவேனே
உன்னையல்லா லழிவேனே. – சுத்த
சரணங்கள்
1.அடியேன் புத்திபலத்தினால் என் ஆத்மமீட்பர்
அருளைப் பெறவும் போகுமோ?
மிடியுறும் ஏழைச்சிஷ்டி தான் மனந்திரும்பி
விசுவாசங் கொள்ளலாகுமோ?
கடினம் என் மனங்கல்லு
கர்த்தா ஓர் வார்த்தை சொல்லு
திடசீவன் வரக்கொல்லு
சேவடி நீ சேர்த்துக்கொள்ளு- சுத்த
2.சுவிசேடத்தின் தொனியினால் எனையழைக்கும்
சுகிர்தந்தனை யானறிந்தேன்
உவந்தளிக்கும் வரங்களால் என் இதயத்துக்
கொளிதருவதை யுணர்ந்தேன்.
அவமாகா மெய்விஸ்வாசம்
அதனால் தூய்மை நன்;னேசம்
கவர்ந்துனைத் தொழும்பாசம்
கனிந்தளித்தாய் நல்வாசம்.- சுத்த
3.பூமியெங்கும் உள்ள சபையை வரவழைத்துப்
பொற்புற விணைத்துச் சேர்த்துச்
சாமியொளிதந்து தூய்மை அளித்துயேசு
தற்பரனில் நித்தங்;காத்து
ஷேமகரஞ் செய்யும் நேயா
தின்மையைப் பகைக்குந் தூயா
பாமரர்க்கு நற்சகாயா
பார்த்திபா என்றென்றும் மாயா.- சுத்த
4.நித்தமும் பவம் பொறுக்கிறாய் திருச்சபையில்
நீதிதீர்வை நாளிலேயன்பாய்ச்
செத்த விசுவாசிகளையும் என்னையும் உடல்
ஜீவனோடெழுப்புவாய் இன்பாய்.
நித்திய ஜீவன் தருவாய்
நின்மலன் யேசுவை மெய்யாய்ப்
புத்தியாகவே மனம்வாய்
பற்றினோர்க்கு மா தயவாய்.- சுத்த
Suththa paran suththa Aaviyae song lyrics in English
Suththa paran suththa Aaviyae Nin Maa Magimai
Sollavaram Enakkeevaiyae
Meththavum Asuththan Naanae
Meavinean Nin Paathanthnae
Uththamanam Kenjuveanae
Unnaiyalla Aaliveanae
1.Adiyean Puththi Belaththinaal En Aathma Meetpar
Arulai Pearvum Pogumo
Midiyurum Yealai Shisti Thaan Mananthirumbi
Visuvaasam Kolalaagumo
Kadinam En Manamkallu
Karththa Oor Vaarthai Sollu
Thida Seevan Vara Sollu
Sevadi Nee Searthukollu
2.Suvisheadaththin Thonininaal Enai Alaikkum
Sugirthanai Yaanarinthean
Uvanthalikkum Varankalaal En Idhayathukku
Kolitharuvathai Unarnthean
Avamahaa Mei Visvaasam
Athanaal Thooimai Nanneasam
Kavarnthunai Tholum Paasam
Kanithalithaai Nal Vaasam
3.Boomi Engum Ulla Sabaiyai Varavalaithu
Porpura Vinaithu Searthu
Saamiyoli Thanthu Thooimai Alithu Yesu
Tharparanil Niththam Kaathu
Sheamakaram Seiyum Neaya
Thinmaiyai Pagaikkum Thooya
Paamararkku Narsakayaa
Paarthibaa Entraentrum Maayaa
4.Niththamum Pavam Porukkirathaai Thirusabaiyil
Neethi Theervai Naalileaye Anbaai
Seththa Visuvaasikalaiyum Ennaiyum Udal
Jeevanodu Eluppuvaai Inbaai
Niththiya Jeevan Tharuvaai
Ninmalan Yesuvai Meiyaai
Puththiyahavae Manam Vaai
Pattinorkku Maa Thayavaai