ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி – Orey Vazhi enthan yesuvin
ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி – Orey Vazhi enthan yesuvin
ஒரே வழி எந்தன் இயேசுவின் வழி
இன்ப மோட்ச நாட்டை நாம் சேரும் வழி
பாமில்லாப் பாடு பரலோக நாடு
அந்த நாடு சேர இயேசுவே வழி (2)
1. பூமியில் பிறந்ததின் நோக்கத்தை நினைத்துக்
கலங்கிச் சோர்வாயொ?
நோக்கிப்பார் இயேசுவை
நோக்கமும் அர்த்தமும் ஈந்திடுவார் – ஒரே வழி
2. பாவத்தின் பிடியினில் ஆத்துமா கலங்கி
பாரம் சுமப்பாயோ?
நோக்கிப்பார் இயேசுவை
பாவமும் பாரமும் நீக்கிடுவார் – ஒரே வழி
3. திரும்பி நீ பார்த்துமே பாவத்தில் விழுந்து
நிம்மதி இழந்தாயோ?
நோக்கிப்பார் இயேசுவை
இரட்சிப்பின் சந்தோஷம் தந்திடுவார் – ஒரே வழி
4. பாவத்தின் சம்பளம் மரணத்தை அழிக்க
இயேசு தோன்றினார்
மரித்தாரே உயிர்த்தாரே
பாதையாய் தீபமாய் மாறினாரே – ஒரே வழி