ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே-OLIYAI VASTHIRAMAI
ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே, வானங்களை திரைப்போல் விரித்தவரே
மேகங்களை உந்தன் ரதமாக்கினீர், காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே,
அழகான ஒரு சத்தம் காதில் கேட்க, ஓடோடி வந்தேனே உம்மை பார்க்,
எனக்காக காத்திருக்கும் உறவை கண்டேன்
எனக்காக பரிதவிக்கும் அன்பை கண்டேன்
அவர் நாமம் அதிசயமானவர், பரிசுத்தமுள்ளவர், மகத்துவமானவர்,
அவர் நாமம் சர்வ வல்லவர், உன்னதமானவர், துதிகளின் பாத்திரர்,
இம்மானுவேலன் என்னோடு இருக்க வேறென்ன வேண்டும் உலகத்திலே
இம்மானுவேலன் என்னோடு இருக்க வேறென்ன வேண்டும் இந்த உலகத்திலே – அவர் நாமம்..
தேற்றரவாளன் என் சார்பில் இருக்க உலகத்தில் எந்த அன்பும் தோற்றே போகும்
தேற்றரவாளன் என் சார்பில் இருக்க உலகத்தில் எந்த அன்பும் தோற்றே போகும் – அவர் நாமம்..