கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram
கடுங்குளிரின் நேரம்- Kadum Kulirin Neram
கடுங்குளிரின் நேரம்
நம் மன்னவன் பிறந்தாரே
கன்னி மரியின் மடியில்
நம் பாலன் பிறந்தாரே
ஆரிரோ ஆராரீரோ
வானிலே வெண்ணிலா ஆடிடுதே
மேகமும் தொட்டிலாய் மாறிடுதே
பூமகன் புன்னகை புரிந்ததால்
பூமியின் பாவங்கள் அகன்றதே
கண்ணே மணியே கண்ணுறங்கு
இருள் அகலவே பிறந்தவர்
மகிழ் கொண்டாடவே மலர்ந்தவர்
சத்திய நாதனை பற்றிக்கொண்டால்
நித்திய வாழ்வினை பெற்றுக்கொள்வாய்
கண்ணே மணியே கண்ணுறங்கு