கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu
கண்கள் திறக்க பாக்குது – Kangal Thirakka Paakkuthu
கண்கள் திறக்க பாக்குது
என் மனசு உங்கள தேடுது
விழுந்த பிறகும் உங்க கைகள்
என்ன அணைக்குது
ஏங்கி விலகி பொறுமை இல்ல
கண்ணின் கனவும் விடியவில்ல
ஆழி தூரம் இறங்கி பொதஞ்சி
இருக்கும் மனசிது
விடாம என்ன துரத்தும்
தோல்வி நாட்களை
உம் பாதம் தழுவி நானும்
ஜெயிக்க பாக்குறேன்
என் வாழ்வு முற்றுப்புள்ளி,
காற்புள்ளி ஆக்கத்தான்
ஓடுறேன், தேடுறேன்,
தவிச்சு நிக்குறேன்
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்-2
வெறுமை வாழ்வும் மாறுது
அடைஞ்ச கதவும் திறக்குது
கண்கள் பார்க்கும் தூரம்,
பாதை தெளிவா தெரியுது
வறண்ட நிலமும் மாறுது,
செழிப்பும் தழைப்புமாகுது
மனசு விரும்பும் படி
என் வாழ்க்கை உம்மால் மாறுது…
எதிர்பாரா கணங்கள்
எந்தன் வாழ்வை ஆளவே
உம் கையின் கிரியைக்குள்ளே
அடங்கி போகுறேன்
வணங்கா கழுத்தும் வணங்க
முழுவதுமா கொடுக்குறேன்
நீங்க பாதை காட்ட நானும்
உம்மை தொடருறேன்
மனசோட சேர்ந்த பாரம்,
அதை கண்ட தெய்வம் நீரும்
கொஞ்சம் தூக்கி சுமக்க
இறங்கி வந்தீரோ
கண்ணீர தொடச்சி விட்டு
முன் செல்ல பாதை காட்டி
மனசார கிருபை அள்ளி தந்தீரோ
எந்நாளும் மறக்க மாட்டேன்
உங்க தயவு எந்தன் மேல
விலகாத சமுகம் கொண்டு,
முன்னே போன தெய்வம் நீங்க
இந்த வாழ்க்கை ஒரு
தருணமுன்னு எண்ணி
நானும் வாழ போறேன்
உமக்கு சரணம் பாடி
என் இதய கதவை திறந்த
எந்தன் சாமி இயேசுவே
உம் வழியில் நானும் பின்னே போயி
நிமிர்ந்து நிக்குறேன்-2
EN SAAMY YEASU – Cathrine Ebenesar – Samuel Melki _ 4K
என் இதய கதவை திறந்த – En Idhaya Kathavai Thirantha