கருணைக் கடலாம் இயேசுவே – Karunai kadalaam Yesuvae

Deal Score+3
Deal Score+3

கருணைக் கடலாம் இயேசுவே – Karunai kadalaam Yesuvae

கருணைக் கடலாம் – இயேசுவே
கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள்

சரணங்கள்

1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை
வர்த்திக்க வேணும் விஸ்வா-சத்தை
புகழ்ந்திடவே திரு நா-மத்தை-எங்கள் – கருணை

2. தாரக மற்ற தரணி யோரை
தாமத மின்றியே மீட்டிட
எழுந்திடுமே இந்நே-ரமே- எங்கள் – கருணை

3. அப்போஸ்தலர் காலம் போல
அற்புதங்கள் அடையாளங்கள்
அதிசய நாமத்தில் ஓங்-கிட-எங்கள் – கருணை

4. முடவர் குதிக்க ஊமை துதிக்க
செவிடர் குருடர் கூ-னரும்
சுகமடைந்து உமைப் பா-டிட – எங்கள் – கருணை

5. கன்னியாகக் கறை களின்றி
மன்னன் தோன்றும் வே-ளையில்
பறந்திடவே சபை மே-கத்தில் – எங்கள் – கருணை

6. தயா கரமே தஞ்சம் நீரே
தியாகமே மேன்மையாம் தா-சரே
அபிஷேகித்து உபயோ-கியும் – எங்கள் – கருணை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo