கர்த்தர் என் பெலனானார் – Karththar En Belananaar
கர்த்தர் என் பெலனானார்
அவரே என் கீதமானார்
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
எனது (நமது) கூடாரத்தில்
அல்லேலூயா (4)
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு-கர்த்தர்
1. கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன்
மனிதன் எனக்கு எதிராய்
என செய்ய முடியும்-மகிழ்ச்சி குரல்
2.இந்த நாள் நல்ல நாள்
யேகோவா தந்த நாள்
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார்-நீ-மகிழ்ச்சி குரல்
3.ஈக்கள் (தேனீக்கள் ) போல் பாடுகள்
எனை சூழ்ந்து வந்தாலும்
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன-மகிழ்ச்சி குரல்
4. கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார்-மகிழ்ச்சி குரல்
5. விழும்படி தள்ளினார்கள்
என்னை வீழ்த்த முயன்றார்கள்
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார்- மகிழ்ச்சி குரல்