கானான் பயணமோ தூரம் எகிப்தை – Kaanaan Payanamo Thooram

Deal Score+2
Deal Score+2

கானான் பயணமோ தூரம் எகிப்தை – Kaanaan Payanamo Thooram

1. கானான் பயணமோ தூரம் எகிப்தை
கடந்து நாம் சென்றிடுவோம்
கர்த்தர் இயேசு உடன் வருவாரே – கானானை
களிப்புடன் சேர்ந்திடுவோம் – கானான்

2. பார்வோனின் சேனை பின் தொடர்ந்தாலும்
செங்கடல் எதிரே தெரிந்தாலும்
செங்கடலைப் பிளந்து இஸ்ரவேலை நடத்தும்
சேனைகளின் கர்த்தர் உடன் வருவார் – ஒரு
சேதமின்றி நம்மை நடத்திடுவார் – கானான்

3. வனாந்திர வழியே நடத்திடுவார்
வாதைகள் ஏதுமின்றி காத்திடுவார்
வானத்தின் மன்னாவால் போஷித்து காக்கும்
வல்ல நம் கர்த்தர் உடன் வருவார் – தினம்
வழுவாமல் நம்மை நடத்திடுவார் – கானான்

4. மாராவின் தண்ணீரைக் கடந்திடுவார்
ஏலீம்மின் நீரூற்றைக் கண்டிடுவோம்
மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றும்
மகிமையுள்ள கர்த்தர் உடன் வருவார் – அந்த
மகிழ்ச்சியினால் நாம் கடந்திடுவோம் – கானான்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo