கிருபை வேண்டும் நாதா இயேசுவே – Kirubai Vendum Naatha Yesuve

Deal Score+1
Deal Score+1

கிருபை வேண்டும் நாதா இயேசுவே – Kirubai Vendum Naatha Yesuve

பல்லவி

கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய
கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில்

1. உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது – கிருபை

2. ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின – கிருபை

3. இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின – கிருபை

4. பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின – கிருபை

5. பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே – கிருபை

6. தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் – கிருபை

7. வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட – கிருபை

8. அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
முடிவு வரைக்கும், காத்திடும் கிருபையால் – கிருபை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo