சத்திய வேத புத்தகமே – Saththiya Veadha Puththagamae

Deal Score+1
Deal Score+1

சத்திய வேத புத்தகமே – Saththiya Veadha Puththagamae

பல்லவி

சத்திய வேத புத்தகமே

அனுபல்லவி

நித்திய திரியேக – கர்த்தன் அருளிச் செய்த

1. மத்தியஸ்தனைக் குற்றவாளிக்குக் காட்டும்
வைத்தியனை நோயாளிக்குப் புகட்டும்
இத்தரையோர்க் கொரு ரட்சிப்பை யூட்டும்
இயேசுகிறிஸ்து நாமத்தைப் பாராட்டும் – சத்திய

2. ஆயிரமாயிரமான பொன் வெள்ளி
அருமையைப் பார்க்கிலு மதிகம் விலையுள்ள
தூய மறை உனக்கு ஒப்பாகச் சொல்ல
தொல்லுலகில் ஒரு நூலுண்டோ? அல்ல! – சத்திய

3. பிள்ளைகள் பெற்றோர்கள் புருஷர் மனைவிகள்
பெலத்தோர் பெலவீனர்; பேதைகள் ஞானிகள்
செல்வ ரெழியோர்கள் தேசிகர் மன்னர்கள்
ஜெகத்தி லனைவர்க்கும் ஜீவ வசனங்கள் – சத்திய

4. புத்தி போதகத்துக்குரிய நன்னூலே
போத ஆத்துமத்தின் போஜனப் பாலே
பக்தி பரிவு நிறை பாச நீர்க்காலே
பாவங்களைப் பிளக்கப் பாய்ந்திடும் வாளே – சத்திய

5. பாதைக்குரிய தீபமும் நீ யாவாய்
பரிதிக்கு மேற்படும் பலனைச் சொரிவாய்
சோதனைகளை வெல்ல திடனைத் தருவாய்
சுவிசேஷ மீந்து நீ தேற்றியே வருவாய் – சத்திய

Saththiya Veadha Puththagamae song lyrics in english

Saththiya Veadha Puththagamae

Niththiya Thiriyeaga Karththan Aruli Seitha

1.Maththiyasthanai Kuttravaalikku Kaattum
Vaiththiyanai Noyalikku Pugattum
Iththaraiyork Koru Ratchippai Yuttum
Yeasu Kiristhu Naamaththai Paaraattum

2.Aayiramaayiramaana Pon Velli
Arumaiyai Paarkkilum Mathigam Vilaiyulla
Thooya Marai Unakku Oppaaga Solla
Thollulagil Oru Nuulundo

3.Pillaigal Pettorgal Purishar Manaivigal
Belaththor Belaveenar Peathaikkul Gnanigal
Selvaroliyoorgal Deasigar Mannargal
Jegaththil Anaivarkkum Jeeva Vasanagal

4.Puththi Pothakaththukuriya Nannoolae
Potha Aathumaththin Pojana Paalae
Bakthi Parivu Nirai Paasa Neerkkaalae
Paavangalai Pilakka Paainthidum Vaalae

5.Paathaikkuriya Deepamum Nee Yaavaai
Parithikku Mearpadum Belanai Sorivaai
Sothanigalai Vella Thidanai Tharuvaai
Suvisesha Meenthu Nee Theattriyae Varuvaai

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo