சந்தோஷத்தோடு பாடிடுவோம் – Santhosathodu paadiduvom
சந்தோஷத்தோடு பாடிடுவோம்
இயேசு பாலன் பிறந்தார் இன்று
களிப்போடு ஆர்ப்பரிப்போம்
யூதராஜன் பிறந்தார் இன்று
ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்
என்னை மீட்க இயேசு மண்ணுலகில் வந்தாரே
யூதருக்கு ராஜாவாக பிறந்தவர் எங்கே
அவரை பணிந்து தொழுதிட வந்தோம்
ஏரோது ராஜா அதைக்கேட்டு கலங்க
எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்க
பிறந்தார் பெத்லகேமிலே
ஞானம் வளர்ச்சி கிருபை பெற்றவர்
நியாயம் நீதி பறைசாற்றும் தேவனவர்
செயலில் மகத்துவமான தேவன் இயேசு
பாவத்தை போக்கும் பரிசுத்தர் இயேசு
பிறந்தார் இந்த பூவுலகில்
வானமும் பூமியும் படைத்த தேவனை
வருஷத்தை நன்மையால் முடிசூட்டும் ராஜனை
பாவத்தை போக்கும் பூலோக கோமானை
பரிசுத்தம் தந்திடும் உலகத்தின் ரட்சகனை
பணிந்திடுவோம் துதி சாற்றிடுவோம்