சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu song lyrics
சபையே விழித்திடு – Sabaiyae Vizhithidu song lyrics
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு
திறப்பிலே நின்றிடு போராடிஜெபித்திடு(2)
ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம்
ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2)
தேசத்தின் எதிர்காலம்
ஜெபிக்கும்நம் கையிலே
தேவ நாமம் தரித்த நாம்
நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் – ஜெபம்
தேசத்தின் குடிகள் அழியுதே
நம்மனம் பதறாதோ
நம் கண்ணீர் சிந்தியே
ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் – ஜெபம்
பரிந்து பேசி தினம்ஜெபித்திட
பாரம் இல்லையோ
ஆபிரகாமின் சந்ததி
இன்று அசதியாய் போனோமே – ஜெபம்