சிலுவைதனில் உயிர்பிரிய – Siluvaithanil Uyir Piriya
சிலுவைதனில் உயிர்பிரிய – Siluvaithanil Uyir Piriya
கண்ணிகள்
1. சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் முகநோக்கி
தேவ அன்னையும் கூவி அழுதாள் வெகுவாய் ஆ! ஆ!
2. உலகமதில் இருசேரார் நடுவாக மரமீதில்
உறங்குவதும் சுகமாச்சுதோ – மகனே ஆ! ஆ!
3. ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த
அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ – மகனே ஆ! ஆ!
4. பல பல பேர் அவமாக பகடியோடு பாராட்ட
பாங்குதனில் நித்திரையானீரோ – மகனே ஆ! ஆ!
5. ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு
அம்புவியால் வெம்பினேனே – மகனே ஆ! ஆ!