சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்- Siluvai Kodi yeanthi selluvom
சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம் – Siluvai Kodi yeanthi selluvom
சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்
இனிமை கவி பாடி வெல்லுவோம்
செல்லுவோம், சொல்லுவோம், வெலலுவோம் (2)
சரணங்கள்
1. காடு மலைகளும் கடந்து செல்லுவோம்
கடின உள்ளங்கள் உருக பாடுவோம் (2) – சிலுவை
2. வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே
பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம் – சிலுவை
3. துன்பம் வந்தாலும், தொல்லை நேர்ந்தாலும்
தூயர் சேவையில் பின்னடையோமே (2) – சிலுவை
4. இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர
இன்ப நாமத்தை எங்கும் கூறுவோம் (2) – சிலுவை