சுவிசேஷத்தைக் கேட்பீரே-Suvisheththai Keatpeere

Deal Score+1
Deal Score+1

பல்லவி

சுவிசேஷத்தைக் கேட்பீரே
சுதன் இயேசுவை ஏற்பீரே

சரணங்கள்

1. நம் பாவங்கட்காகவே இம் மானிலம் வரவே
சிலுவையைச் சுமந்தாரே
ஜீவனையும் ஈந்தாரே – சுவி

2. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமே என்றாரே
அவராலே யன்றி நித்திய
ஜீவனில்லை என்றாரே – சுவி

3. வருத்தப்பட்டுப் பாரமே சுமப்பவர்கள் யாவரும்
வருவீரே என்னிடமே
தருவேன் இளைப்பாருதலே – சுவி

4. முள் முடியுடன் சிலுவையிலே முடிந்தது எல்லாம் என்றாரே
உள்ளத்தில் விசுவாசித்தால் வல்ல
இரட்சிப்பைப் பெறுவாய் – சுவி

5. இவ்வளவு பெரிதான இரட்சிப்பை அறியாது
கவலையற்றிருப்போரே
தண்டனைக்குத் தப்புவீரோ? – சுவி

யோவான் 10:9 (John 10:9)

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.

யோவான் 14:6 (John 14:6)

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo