ஜீவன் தரும் வார்த்தை அது – Jeevan Tharum Vaarthai
ஜீவன் தரும் வார்த்தை அது – Jeevan Tharum Vaarthai
ஜீவன் தரும் வார்த்தை அது உன்னிடம் உள்ளது
என்னை ஆசீர்வதிக்கும் கரமும் அது உம்மிடம் உள்ளது(2)
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உந்தன் பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா ( 2 )
1 அனாதை போல நானும் அடைக்கலம்
இல்லாமல் அலைந்தேன் போகும் பாதை
தெரியாமல் வழியிலே கலங்கி நின்றேன் (2)
வந்தீரே உந்தன் பிள்ளை என்று மீட்டிரே உந்தன் ஜீவன் தந்து
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு யாரும் இல்ல பா ( 2 )
2 தோல்விகள் சூழும் நேரம் என் சொந்தமே
எதிராய் மாறும் நொந்து போனது
எந்தன் மனது என் கண்ணீரே தினம் உணவு(2)
கண்ணீரை கரத்தால் துடைத்துவிட்டீர்
உந்தன் மார்பினில் என்னை சாய்த்து கொண்டீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)
3 முடிந்து போனது வாழ்க்கை
என்ற சூழ்நிலை தினம் தினம் கூறும்
இனியும் எழும்ப வழியில்லை
என்று நினைவினில் அடிக்கடி தோன்றும்(2)
முடிந்து போனதை தொடங்கி
வைத்து இதுவரைக்கும் என்னை நடத்தி வந்தீர்
உம்மை விட்டால் எங்கே போவேன் ஏசப்பா
உங்க பாதம் விட்டா எனக்கு எதுவும் இல்ல பா(2)
Ummai Vitaal Enga Poven | Aaron Bala | Tamil Christian Song 2020 ALBUM .OMEGA 1 LYRIC TUNE & SONG BRO AARON BALA 8870800833 MUSIC.BPM