ஜீவிப்பது நான் அல்லவே – Jeevippathu Naan Allavae
ஜீவிப்பது நான் அல்லவே – Jeevippathu Naan Allavae
ஜீவிப்பது நான் அல்லவே
என்னில் நிறைந்த இயேசுவே என்னோடிருப்பதால்
சுவாசிப்பது நான் அல்லவே
சுவாசமாகவே எனக்குள் அவரே இருப்பதால்
தோல்வி இல்லையே – எனக்கு
பயமும் இல்லையே
சுவாசமாகவே எனக்குள் அவரே
இருப்பதால்் – 2
1. ஒன்றுக்கும் உதவாது ஒருநாளும் விடியாத
தோல்வியான பழைய வாழ்வை நினைத்துப் பார்க்கிறேன்
தந்தையைப் போல் அன்பு வைத்து என்னைத் தேடி வந்தாரே
வெற்றியுள்ள புதிய வாழ்வை எனக்குத் தந்தாரே
2. வெறுமையான பாத்திரனாய் திறமையேதும் இல்லாது
ஒளிந்து ஒளிந்து மறைந்த வாழ்க்கை மறைந்துபோனதே
அன்னையைப் போல் அரவணைத்து வரங்களினால்
எனை நிறைத்து மகிமையான பாத்திரமாய் மாற்றிவிட்டாரே
3. பாவத்தினால் மனம் நொந்து இருதயத்தில் பயம் வந்து
தனிமையையே நாடிவந்த நாட்கள் போதுமே
நண்பனாக என்னை நினைத்து என் பாவம் தனை சுமந்து
தன் உயிரை தந்தவரை போற்றிப் பாடுவேன்