தலை குனிந்த இடத்தினிலே – Thalai Kunintha Idathinilae

Deal Score+1
Deal Score+1

தலை குனிந்த இடத்தினிலே – Thalai Kunintha Idathinilae

தலை குனிந்த இடத்தினிலே
தலை நிமிர செய்தவரே
தடுமாறும் என் படகை
தாங்கி பிடித்த நேசரே-2

என்னை உமக்காக இன்று தந்தேனே
என் ஆயுள் உள்ளவரை முழுதும் தருவேனே-2

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்-2

1.வேரில்லா மரம் போல் ஆனேன்
வேரூன்ற செய்தீரே
கனிகளால் நிரப்பி என்னை
கனி கொடுக்க வைத்தீரே-2-என்னை உமக்காக

உம்மை அல்லாமல் யார் உண்டு
நீர் மட்டும் போதும் நான் வாழ்வதற்கு-2
என் பாசமும் நீரே
என் சுவாசமும் நீரே
நீர் வந்தாலே போதும் இயேசுவே-2

வந்தீரே அணைத்துக்கொள்ள
தந்தேனே முழுவதுமாய்
வருவீரே மீட்டுக்கொள்ள
தருவேனே நிச்சயமாய்-4

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo