துதிப்பேன் துதிப்பேன் அண்ணல் – Thuthipean Thuthipean Annal
துதிப்பேன் துதிப்பேன் அண்ணல் – Thuthipean Thuthipean Annal
துதிப்பேன், துதிப்பேன், துதிப்பேன்
அண்ணல் இயேசுவையே துதிப்பேன்
காலா காலமெல்லாம் என்னைக் காத்தவரை
நான் உள்ளளவும் துதிப்பேன்
1. பாவங்கள் பல நான் செய்திட்டாலும்
பாவி என் மீது அன்பைச் சொரிந்து
என்னை மீட்டு காத்து நடத்திய
என் இறைவனைத் துதிப்பேன்
2. நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும்
துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும்
என்னைத் தேற்றி அன்புகூர்ந்த
என் இறைவனைத் துதிப்பேன்
3. வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே
தாழ்விலும் என்னை நீர் தாங்கிட்டீரே
ஏழை நானே பாதம் பணிந்து
எந்தன் இறைவனைத் துதிப்பேன்