தூதர் வணங்கும் தேவன் – Thoothar Vanangum Devan Lyrics
தூதர் வணங்கும் தேவன் – Thoothar Vanangum Devan Lyrics
1.தூதர் வணங்கும் தேவன் மானிடர்மேல்
ஏன் அன்பு கொண்டார்? என்பதறியேன்;
அலைந்து திரிந்தோரை அன்பாய்த் தேடி
மேய்ப்பன்போல் மீட்டுக் கொண்டார், அறிவேன்.
பெத்லகேம் முன்னணையை வீடாய்க் கொண்டு
மரியின் பாலனாகத் தோன்றினார்,
சிற்றூராம் நாசரேத்தில் வாழ்ந்து வந்தார்,
உலக இரட்சகர் இவர், என்றறிவேன்.
2 இன்னலின் பள்ளத்தாக்காம் இவ்வுலகை
மெய்ச்சமாதானத்தால் நிரப்பினார்,
மௌனமாக நோவு, பாடுகள் ஏற்று,
சிலுவையில் திருப்பலியானார்.
இவரே நம் பாவப்பளுவை நீக்கி,
நீதியின் இளைப்பாறுதல் ஈவார்;
உடைந்த உள்ளங்களைச் சுகமாக்க
இதோ! உலக இரட்சகர், இங்கே உள்ளார்.
3.நாற்றிசை தேசம் யாவும் வெற்றி கொண்டு
பூலோகரைத் தம் சொந்தம் ஆக்குவார்;
பரிசுத்தர், பாவி என்றும் பாராமல்
தேவை, வாஞ்சை யாவும் பூர்த்திசெய்வார்.
மா லோக மீட்பரை அறியும் காலம்
மாம்சம் எல்லாம் மகிமையைக் காணும்;
சந்தோஷ நாள் ஒன்றில் நீதியின் சூரியன்
மா ஜோதியாய் எங்கும் வீசிப் பிரகாசிக்கும்.
4 அன்பால் மானிட உள்ளங்கள் நிரம்பி
மா பெரும் கோலாகலம் எழும்பும்,
விண், மண் எல்லாம் தேவனை வணங்கிடும்,
அவர் சொல்ல புயல்கள் அமையும்.
கெம்பீரித்து வானங்கள் பூரிப்பாகும்.
எண்ணற்ற மானிடக் குரல் பாடும்;
அவரே ராஜா! உலகின் நல் மீட்பர்!”
என்று கோளங்கள் யாவும் எதிரொலிக்கும்.
Thoothar Vanangum Devan Lyrics
1.Thoothar Vanangum Devan Maanidar Mael
Yean Anbu Kondaar Enbathariyean
Alainthu Thirinthorai Anbaai Theadi
Meippan Poal Meettu Kondaar Arivean
Bethlegam Munnanaiyai Veedaai Kondu
Mariyin Baalanaaga Thontrinaar
Sittooraam Naasanearathil Vaalnthu Vanthaar
Ulaga Ratchakar Evar Entrarivean
2.Innalin Pallaththakkaam Evvulagai
Mei Samathanathaal Nirappinaar
Mounamaaga Novu Paadugal Yeattru
Siluvaiyil Thiruppaliyaanaar
Evarae Nam Paava Paluvai Neekki
Neethiyin Elaippaaruthal Eevaar
Udaintha Ullangalai Sugamaakka
Itho Ulaga Ratchakar Ingae Ullaar
3.Naattrisai Desam Yaavum Vettri Kondu
Poologarai Tham Sontham Aakkuvaar
Parisuththar Paavi Entrum Paaraamal
Devai Vaanjai Yaavum Poorthi Seivaar
Maa Loga Meetparai Ariyum Kaalam
Maamsam Ellaam Magimaiyai Kaanum
Santhosha Naal Ontril Neethiyin Sooriyan
Maa Jothiyaai Engum Veesi Pirakaasikkum
4.Anbaal Maanida Ullangal Nirambi
Maa Perum Kolakalam Elumbum
Vin Man Ellaam Devanai Vanangidum
Avar Solla Puyalkal Amaiyum
Kembeerithu Vaanagal Poorippaagum
Ennattra Maanida Kural Paadum
Avarae Raaja Ulagin Nal Meetpar
Entru Kolangal Yaavum Ethirolikkum