தேவன் வருகின்றார் வேகம் இறங்கி- Devan Varukintaar Vegam Irangi

Deal Score+1
Deal Score+1

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி- Devan Varukintaar Vegam Irangi

1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்

இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்த கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே

2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த
எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
ஏசு கிறிஸ்துவின் சத்தியத்தை
ஏற்க மறுத்தவர் நடுங்குவார் – இயேசு

3. தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயத் தீர்த்திடுவார் – இயேசு

4. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் – இயேசு

5. அந்தி கிறிஸ்தன்றே அழிந்து மாள
அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
வாயில் இருபுறம் கருக்குள்ள
வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார் – இயேசு

6. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்
கன்மலையாகி இப்பூமி நிரம்பும்
கிரீடங்கள், பாறைகள் கவிழ்ந்திடும்
கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார் – இயேசு

7. யுத்தம் துடங்குமுன் மத்திய வானம்
சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
ஆவி மணவாட்டி வாரும் என்றே
ஆண்டவர் ஏசுவை அழைக்கின்றோம் – இயேசு

கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
VAU. Let thy mercies come also unto me, O LORD, even thy salvation, according to thy word.
அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
So shall I have wherewith to answer him that reproacheth me: for I trust in thy word.
சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
And take not the word of truth utterly out of my mouth; for I have hoped in thy judgments.
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
So shall I keep thy law continually for ever and ever.
நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
And I will walk at liberty: for I seek thy precepts.
சங்கீதம் :119

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo