தேவ சாயல் ஆகா மாறி -Deva Sayal Aaha Maari

Deal Score+1
Deal Score+1

பல்லவி

தேவ சாயல் ஆகா மாறி
தேவனோடிருப்பேன் நானும்

சரணங்கள்

1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே – தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ

2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலையல்லாத பொன்வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ

3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலனடைய
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ

4. ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ

5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ

6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ

7. உன்னத சீயோன் மலைமேல்
என் அருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினி லகமகிழ்ந்திடுவேன் நான்
ஜீவிப்பேனே நீடுழிவாய் – தேவ

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

And be not conformed to this world: but be ye transformed by the renewing of your mind, that ye may prove what is that good, and acceptable, and perfect, will of God.

ரோமர் : Romar 12:2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo