நல்லாவி ஊற்றும் தேவா – Nallaavi Oottrum Deva

Deal Score+2
Deal Score+2

நல்லாவி ஊற்றும் தேவா – Nallaavi Oottrum Deva

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தெகோஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேளையில் இறங்கிடுவீரே
விந்தை செய் விண் ஆவியே – நல்லாவி

2. மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டெனையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே – நல்லாவி

3. ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேஷ பணியாற்றவும் – நல்லாவி

4. பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க – நல்லாவி

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
For the LORD shall be thy confidence, and shall keep thy foot from being taken.
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
Withhold not good from them to whom it is due, when it is in the power of thine hand to do it.
உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Say not unto thy neighbour, Go, and come again, and to morrow I will give; when thou hast it by thee.
நீதிமொழிகள் 3

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo