Home » நாவில் வந்திருப்பாயே நசரேயா – Naavil Vanthiruppaye Nasareya நாவில் வந்திருப்பாயே நசரேயா – Naavil Vanthiruppaye Nasareya
நாவில் வந்திருப்பாயே நசரேயா – Naavil Vanthiruppaye Nasareya
நாவில் வந்திருப்பாயே நசரேயா
நாவில் வந்திருப்பாயே
1. தேவ செங்கோலா திருமனுவேலா
தாவீதரசு பாலா நசரேயா – நாவில்
2. பாவியின் நேசா பரம சந்தோசா
ஆவியை அருளீசா நசரேயா – நாவில்
3. உள்ளங்கள் உருக உன் சபை பெருக
வள்ளலே தயை தருக நசரேயா – நாவில்
4. நின் கவிமானம் நிகழ்ந்த மெஞ்ஞானம்
கல்மனம் உருகும்படி நசரேயா – நாவில்
5. ஆவியால் நிறைந்து அமலனை பாட
ஆசியும் பொழிந்திடுவாய் நசரேயா – நாவில்
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .